திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி விரைவு ரயில் ஒரு மணி நேரம் திருவள்ளுர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். சப்தகிரி விரைவு ரயிலை இயக்கிய லோகோ பைலட் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிறு வலி ஏற்பட்ட நிலையில், இரவு 9 மணியளவில் திருவள்ளூரில் ரயிலை நிறுத்தி விட்டு, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் யுகேந்திரன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு லோகோ பைலட் வரவழைக்கப்பட்டு, சுமார் 10.15 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டது.