தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர், அதற்கு பதிலாக 24ம் தேதி வேலை நாளாக அறிவித்தார்.