புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை நெல் சேமிப்புக் கிடங்கில் நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்த 2 மாதமாக சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருந்தன.