சென்னை கிண்டியில் சாலையில் நடந்து சென்ற பெண் மீது லோடு வாகனம் மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கிண்டி காவல் நிலையம் அருகே சண்முக ரம்யா என்ற இளம்பெண், நேர்முக தேர்வுக்கு செல்வதற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த லோடு வாகனம் அப்பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமலேயே சென்றது.