திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பத்தில் உள்ள வர்மா கிளினிக்கிற்கு காய்ச்சல், சளி காரணமாக அழைத்து வரப்பட்ட 2 வயது சிறுமிக்கு, மருத்துவர் அறிவுரையின் படி அளவுக்கு அதிகமாக மருத்து கொடுத்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்து சிறுமியின் உறவினர்கள் வர்மா கிளினிக்கை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.