நெல்லை தச்சநல்லூரில் மாநகராட்சி விநியோகம் செய்த குடிநீரில் சிறிய பாம்பு வந்தது பீதியை ஏற்படுத்தியது. குறுக்குத்துறை கொண்டா நகரம் ,அரியநாயகிபுரம், மனப்படை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து அதிலிருந்து குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தரமற்று இருப்பதாக குடியிருப்புவாசிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இப்போது அதில் பாம்பும் வந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.