தமிழகத்தில் கண்டிப்பாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு உள்ளதாகவும், படிப்படியாக அவை மூடப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோடு அருகே சூரம்பட்டி அணைக்கட்டு முழுவதும் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற திருமாவளவனின் கொள்கையில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார். மேலும், சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளதாகவும், இனி தேவையைப் பொறுத்துத்தான் வீடுகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.