சென்னை ஆதம்பாக்கத்தில் விதிமுறைகளை மீறி, 24 மணி நேரமும் மதுபான கடை செயல்பட்டதை, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை, பாரின் உரிமையாளர் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. போலீசாரின் ரோந்து வாகனம் வருவதை கூட பொருட்படுத்தாமல், காலை 11 மணிக்கே கடையை திறந்து மதுபானம் விற்பனை நடந்து வந்தது. பின்னர் போலீசார் வந்து அங்கிருந்தவர்களை வெளியேற்றிய நிலையில், பாரின் உள்ளேயே போலீசாரை வைத்து பூட்டி விட்டு பாரின் உரிமையாளர் செய்தியாளரையும் மிரட்டியுள்ளார்.