சேலம் மாவட்டம் குஞ்சாம்பாளையம் லிங்கமேடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளனோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.