ராணிப்பேட்டை மின்னல் தாக்குதல் (Ranipet thunderstorm):ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மின்னல் தாக்கி தாய், மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். நெமிலி சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. சந்தனபுரம் கிராமத்தை சேர்ந்த கனகா மற்றும் அவரது மகன் ஈஸ்வரன் ஆகியோர் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்த மாட்டை பிடித்து வரும்போது எதிர்பாரத விதமாக மின்னல் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.