சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி அடிக்கடி தவறான விஷயங்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா வேதனை தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 9 அறநிலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தினந்தோறும் ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து வருவதாகவும், தீட்சிதர்கள் 2000 ஏக்கர் நிலத்தை விற்றதாக கூறப்படும் தகவல் பொய்யானது எனவும் தெரிவித்தார்.