தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு சிப்காட் நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இந்த தொழில்பூங்கா ஆயிரத்து 724 புள்ளி 57 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாகவும், 462 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18 ஆயிரத்து 300 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.