சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து,அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க தேசிய தின விழாவின் போது ஒவ்வொரு அதிகாரியும் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாகவும், அர்ப்பணிப்பு மற்றும் தொழில் நேர்த்தியுடன் செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ள அவர், சென்னை காவல்துறை கொடுத்த ஆதரவுக்கு தாமே நேரடி சாட்சியாக இருந்ததாக கூறியுள்ளார்.