சிறுபான்மை மக்களின் இன்னல்களை துடைக்க தோழமையுடன் துணை நிற்பதாக சிறுபான்மை உரிமைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்தார். வழிபாட்டுத் தல சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்துக்கு எதிராக சட்டப் போராட்டம் என சிறுபான்மை மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.