நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.