திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் மேய்ச்சலில் இருந்த இரண்டு ஆடுகளை சிறுத்தை வேட்டையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மணிமுத்தாறு அணை அருகே விவசாயி மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு உலாவிய சிறுத்தை, இரண்டு ஆடுகளை கடித்தே கொன்றது.