சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஃபிஃபா உலக கோப்பை வென்ற பிரேசில் முன்னாள் வீரர்களான ரொனால்டினோ, கில்பெர்டோ சில்வா, ரிவால்டோ உள்ளிட்ட பல பிரபலமான வீரர்கள் விளையாட உள்ளதால் கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.