ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியேறி மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை மகளிர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்த செல்வம் என்பவருடைய மகள் பிரியங்கா, சில நாட்களாக திருமணமான நண்பருடன் செல்போனில் பேசிய நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது.