கொல்லைப்புறமாக கொள்கையை நிறைவேற்ற முடியாத எரிச்சலில் மத்திய பாஜக அரசு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்கப் பாருங்கள் என பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்கினார்.