மதுரையில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, சாலையில் படுத்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் தமிழரசன்என்பவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து காவல்துறை ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.