சென்னை புரசைவாக்கம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, சலவை தொழிலாளர்கள் குடியிருப்பினை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அதிகாரிகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.சூளை பகுதியில் ஐந்து தலைமுறைகளாக சலவை தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். அங்கேயே சலவை செய்யும் இடத்தை அமைத்து தொழில் செய்து வரும் நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கூறி, காலி செய்ய அதிகாரகள் உத்தரவிட்டனர்.