வேலூர் மாவட்டம் லத்தேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே கேட் போட்டால் சில நேரங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு திறப்பதாகவும், அதுவரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.