இந்திய கடலோர கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் 228 ரக விமானம் சென்னையில் தரையிறங்கியபோது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 9 மணியளவில் தரையிறங்க முற்பட்ட விமானம் மீது மர்ம நபர்களால் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால், சுதாகரித்து கொண்ட விமானி விமானத்தை தரையிறக்காமல் வானிலேயே வட்டமடிக்க செய்தார். இதனையடுத்து, சில விநாடிகளில் லேசர் ஒளி மறைந்த நிலையில் இரவு 11 மணிக்கே விமானம் தரையிறக்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் இது நான்காவது சம்பவம் என்ற நிலையில் வழக்கு பதிவு செய்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் கண்ணீர் பதிவு