திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ராட்சத மரம் சரிந்து விழுந்ததால் உடுமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அ.கலையம்புத்தூர் என்ற இடத்தில் பெரிய மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் அணிவகுத்து நின்றிருந்த வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.