கொடைக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட நில பிளவு குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இந்திய புவியியல் துறை தெரிவித்துள்ளது. செருப்பன் ஓடை பகுதியில், சுமார் 300 அடி தூரத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டது. இதுதொடர்பாக, புவியியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நில பிளவின் காரணமாக பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்றும், இதனால், நில அதிர்வோ, நில நடுக்கமோ ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், ஓடையில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறியதால் இந்த பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளது.