கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த தொடர் மழை காரணமாக, இடைக்கோடு பேரூராட்சி குளத்தின் அருகில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.