செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். பம்மல் அண்ணா நகர் இளங்கோ தெருவில் பாதாள சாக்கடைக்காக ஜேசிபி எந்திரம் மூலம் குழாய் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலத்தை சேர்ந்த அருள் உள்ளிட்ட மூவர் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 10 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய அருள், இயந்திரம் மூலம் கற்களை உடைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டது. பள்ளத்தில் நின்றிருந்தவர் மண்ணில் புதைந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி அருளை சடலமாக மீட்டனர்.இதையும் படியுங்கள் : சாலையை கடந்த போது பேருந்தை தாக்க முயன்ற காட்டெருமை... காட்டெருமை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற வீடியோ