தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த இளையராஜா, தனது நிலத்தை பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்த நிலையில், கடந்த 17ஆம் தேதி பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்தார். நில அளவையாளர் விஜயகுமாரை அணுகிய போது அவர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கவே, கொடுக்க விரும்பாத இளையராஜா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். அவர்களது அறிவுரையின் பேரில் மணியம்பாடி அடுத்த பெட்ரோல் பங்க் அருகே இளையராஜா கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்ற நில அளவையாளர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.