திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் தண்ணீரில் அரித்து செல்லப்பட்டது. காரணி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் அரித்து செல்லப்பட்டதையடுத்து அவ்வழியாக பயணிக்க தடைவிதிக்கப்பட்டது. 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் இதனை பொருட்படுத்தாத கிராம மக்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர். மேலும் தரைப்பாலத்திற்கு மாற்றாக 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பாளையம் - காரணி இடையே கட்டப்படும் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.