கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆதியூர் கிராமத்தில் பாலசுப்ரமணியன் என்பவர், தாம் வளர்த்து வரும் ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் கட்டி வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதில் இருந்த ஆட்டுக்குட்டி ஒன்றை சிறுத்தை கடித்து குதறியதில் இறந்து கிடந்தது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.