பௌர்ணமி கிரிவலம், வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் சோமவார திங்கட்கிழமையை ஒட்டி பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.