வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே லிங்குன்றம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் ஏரி நீர் புகுந்ததால் வாழை, நெல் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். முழங்காலுக்கும் மேல் தேங்கியுள்ள தண்ணீரில் 700 வாழை மரங்கள், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின.