தென் மாநில மொழிகளுக்கு கடந்த காலங்களில் என்ன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதே அளவு நிதி தான் தற்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தென் மாநில மொழிகளுக்கு நிதி குறைவாக வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதி தான் தற்போது ஒதுக்கீடு செய்து வருவதாகவும், அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது கேள்வி கேட்பது ஏன் என வினவினார்.இதையும் படியுங்கள் : "ஓய்வூதியம் என்பது தர்மம் அல்ல, உரிமை"