ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் இல்லை என கூறி ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், ரத்த பரிசோதனைக்கு கூட பல மணி நேரம் அலைக்கழிக்க வைப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.