காரைக்கால் அருகே குடிப்பதற்கு காசு இல்லாததால் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பைக் மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் போலீசார் விசாரணை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் திருப்பட்டினம் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் வந்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர். இதில் அவர்களிடம் விசாரணை செய்ததில் தனியார் துறைமுகத்தில் டவர் ஆபரேட்டராக வேலை செய்து வந்த மகேஷ் என்பவர் தான் பெண்களிடம் போன் மற்றும் பைக்குகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. உடனே அவரை கைது செய்த போலீசார் செல்போன் மற்றும் கைப்பையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.