கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை அருகே சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளியின் மீது கார் மோதியதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பேத்கர் நகரை சேர்ந்த பதிகுமார் உயிரிழந்த நிலையில், சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை வைக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.