திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெங்காய லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் லிஃப்ட் கேட்டு வந்த கூலித் தொழிலாளி, தவறி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காந்தி காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த புலியூர்நத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், வேலைக்கு செல்வதற்காக சரக்கு வாகனத்தில் ஏறி வெங்காயத்தின் மேல் அமர்ந்து வந்தபோது, அத்திக்கோம்மை மேம்பாலம் அருகே தவறி விழுந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பியோடிய கடத்தல்காரருக்கு வலைவீச்சு.!