சென்னை வியாசர்பாடி அருகே மின்சார ரயில் மீது பாட்டில் வீசியதாக, நடைபாதையில் தங்கி கூலி வேலை செய்து வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 47 வயதான கேப்ரியல் துரைசாமி என்ற அந்த நபர், மதுபோதையில் மின்சார ரயில் மீது பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், ரயிலில் பயணித்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.இதையும் படியுங்கள் : கோவில் கடலில் தவெக கொடியுடன் நின்ற இளைஞர்கள்