சிவகங்கை அருகே, சாலை விபத்தில் பலியான லேப் டெக்னீஷியன் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த 19 வயதான மாணவன் பரத், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், தனது நண்பனான ராஜேஷ் கண்ணனுடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பரத்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.