நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்களில் ஒன்று அருப்புக்கோட்டையில் அமைய உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய அவர், இங்குள்ள விசைத்தறி தொழிலாளர்களின் குறைகளை போக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.