ஆந்திராவில் இருந்து ஈச்சர் லாரியில் கடத்தி வரப்பட்ட 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 800 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டரை பெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரியை சோதனையிட்ட போலீசார், இருவரை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.