சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை வெட்டிக் கடத்த பயன்படுத்தப்பட்டதாக பொக்லைனை போலீஸார் பறிமுதல் செய்தனர். நெல்முடிக்கரை வைகை கரையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்த கருவேல மரங்களை 50-க்கும் மேற்பட்டோர் வெட்டி லாரிகளில் கடத்த முயன்றனர்.