தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் புத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10 ஏக்கரிலான குறுவை பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்ததால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.