ஆதிகும்பேஸ்வரர் கோவில் மாசித் திருவிழா : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். கடந்த 21ஆம் தேதி தொடங்கிய மாசித் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 8ஆம் நாளில் 4 தனித்தனி தேர்களில் எழுந்தருளிய விநாயகர், முருகன், கும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை தாயாரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். Related Link மயிலாடுதுறையில் நெல் விற்பனை செய்வதில் சிக்கல்