தமிழகத்தில் முதன் முறையாக பெண்களே நடத்தும் கும்பாபிஷேக விழா தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடத்தில் நடைபெற்றது.இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை, உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பில் ஆதிசக்தி ஞானபீடத்தில் உள்ள கோவில்களுக்குகும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்காக பெண்கள், பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் குண்டங்களாக அமைத்து யாகசாலை பூஜை நடத்தி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினர்.