கும்பாபிஷேக விழா : சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பக்குட்டை கிராமம் அய்யனூரில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா 8ம் தேதியான நாளை நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீர்த்தக்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் கஞ்சமலை சித்தர் கோவிலுக்கு சென்று புனித நீராடி தீர்த்தங்களை குடங்களில் எடுத்துக்கொண்டு எளம்பிள்ளை வழியாக தப்பக்குட்டையிலுள்ள ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் வரை பம்பை, தாரை, மேளதாளம் முழங்க ஜல்லிக்கட்டு காளை மாடுகள் மற்றும் குதிரைகளுடன் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் பெண்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து ஸ்ரீ பெரிய மாரியம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர். Related Link தொழில் நுட்ப கோளாறால் 2 முறை EMI பிடித்தம் செய்யப்பட்டது