புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சுருளி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு அதில் வைக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுருளி சுவாமிகளின் ஜீவ சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.