தேனி மாவட்டம் கூடலூர் காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கடம் கோவில் வளாகத்தை சுற்றி வர வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.