கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். ஆறு மாத காலமாக, கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அரவக்குறிச்சி மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில், கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி ஜமாத் தலைவர் பைசல் ஹக் தலைமையில் சுமார் 50 இஸ்லாமிய மக்கள், இந்து-முஸ்லிம் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் மரியாதை நிமித்தமாக மாரியம்மன் கோயிலில் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.