புதுக்கோட்டை அருகே தோப்புபட்டி கிராமத்தில், பழனியாண்டவர் கோயிலில், குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள தோப்புபட்டி கிராமத்தில், பழனி ஆண்டவர், இடும்பன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு பிறகு, வெகு சிறப்பாக, இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் பூஜை செய்த பின்னர், புனித நீர் குடங்களை தலையில் சுமந்து, கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து, கோபுர கலசத்தில் சிறப்பு பூஜை செய்த பின்னர், புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி, குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் குலவையிட்டு, முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன், சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.